வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 393 ரன்னில் ஆல்-அவுட்

Thu 4th May, 2017 Author: Kumar Prince Mukherjee

Pakistan Cricket Team

பிரிட்ஜ்டவுன் : பாகிஸ்தான் - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி 3-வது நாளில் முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அசார் அலி 105 ரன்களும், ஒரு ரன்னில் 11-வது சதத்தை நழுவ விட்ட கேப்டன் மிஸ்பா உல்-ஹக் 99 ரன்களும் எடுத்தனர். 

81 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4-வது நாளில் 57 ஓவர் முடிந்திருந்த போது 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது.