ஐபிஎல்: புனே அணியை வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி

Fri 14th Apr, 2017 Author: Kumar Prince Mukherjee

Indian premier league 2017

புனே: ஐபிஎல் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் புனே அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி பெற்றது.ஐ.பி.எல் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் புனே அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற புனே அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் அந்த அணியின் சஞ்சு சாம்சனனின் ஆட்டத்தால் ரன் வேட்டை எகிறியது. அவர் 63 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து, தனது தனிப்பட்ட முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.அவரைத் தொடர்ந்து கிறிஸ் மோரிஸ் 9 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன்கள் சேர்க்க, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய புனே அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் சார்பாக மயான்க் அகர்வால் அதிகபட்சமாக 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களை சேர்த்தார்.மளமளவென விக்கெட்டுகளை இழந்து வந்த புனே அணியில் மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் புனே அணி 16 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்திருந்த போது, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து டெல்லி அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.