வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

Fri 5th May, 2017 Author: Kumar Prince Mukherjee

Pakistan Cricket Team

பிரிட்ஜ் டவுன்: பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 312 ரன்னும், பாகிஸ்தான் 393 ரன்னும் எடுத்தன. யாசிர்ஷாவன் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் தினறியது. 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஹோப் 90 ரன் எடுத்தார். யாசிர்ஷா 6 விக்கெட் வீழ்த்தினார். 

இந்நிலையில், 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷனோன் கேப்ரியல் 5 விக்கெட்களை கைப்பற்றி 11 ரன்களை வழங்கினார். இவருடன் கேப்டன் ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் சமமாகியுள்ள நிலையில் இறுதி போட்டி மே மாதம் 10-ந்தேதி நடைபெறவுள்ளது.