தொடர்ச்சியாக 4 வெற்றிகள்: அசத்தி வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

Thu 6th Jul, 2017 Author: Lokesh Dhakad

Women's World Cup

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய வீராங்கனைகள் 232 ரன்கள் எடுத்தனர்.

233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 78 ரன்கள் அடித்த இந்தியாவின் டிபி ஷர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியை 159 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தத