கோஹ்லியை நம்பியதால் பெங்களூர் அணிக்கு தோல்வி.. பயிற்சியாளர் வேதனை..!!

Sat 13th May, 2017 Author: Kumar Prince Mukherjee

Indian premier league 2017

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, விராட் கோஹ்லியை நம்பிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்று அந்த அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் 9 போட்டிகளில் ஆடிய விராட் கோஹ்லி 250 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கடந்த வருடம் விராட் கோஹ்லி 973 ரன்கள் குவித்தவர் கோஹ்லி என்பதால் அவரை மிகவும் நம்பிக்கொண்டிருந்தது பெங்களூர் டீம்.

ஆனால், கோஹ்லி ரன் குவிக்காத நிலையில், 13 போட்டிகளில் 10 போட்டிகளில் பெங்களூர் அணி தோல்வியடைந்துள்ளது. இதுகுறித்து சஞ்சய் பங்கர் கூறுகையில், விராட் கோஹ்லியை மட்டுமே நம்பிக்கொண்டிருந்தால் பெங்களூர் அணியால் வெற்றி பெற முடியாது. பெங்களூர் அணிக்காக, காயத்தால், ராகுல், சரபர்ஸ் போன்ற முக்கிய வீரர்களால் விளையாட முடியவில்லை என்றார் அவர். பெங்களூர் அணியில் விராட் கோஹ்லி மட்டுமில்லாமல், டிவில்லியர்ஸ், கெய்ல் போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆயினும் இந்த சீசனில் பெங்களூர் அணி படுமோசமாக தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது