Cricket championship
கவுண்டி கிரிக்கெட் 2022: லங்கஷையர் வெற்றிக்கு உதவிய வாஷிங்டன் சுந்தர்!
இங்கிலாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் செட்டேஸ்வர் புஜரா, நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகிறார்கள். அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் லன்க்ஷைர் அணிக்காக முதல் முறையாக கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட தொடங்கியுள்ளார்.
3 வகையான இந்திய அணியிலும் விளையாடியுள்ள இவர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய போது துரதிஷ்டவசமாக காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். 17 வயதில் 2017இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் கடந்த 4 வருடங்களில் இதேபோல் காயங்களால் நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அந்த நிலைமையில் மீண்டும் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்த அவர் இம்முறை இந்திய அணிக்கு திரும்புவதற்காக நேராக இங்கிலாந்துக்கு பறந்து லன்க்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார்.
Related Cricket News on Cricket championship
-
கவுண்டி கிரிக்கெட்: 400 ரன்களைக் கடந்து சாம் நார்த்தீஸ்ட் சாதனை!
இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கிளாமோர்கன் அணி சாம் நார்த்தீஸ்ட் 400 ரன்களை விளாசி சாதனைப் படைத்தார். ...
-
கவுண்டி கிரிக்கெட் 2022: அசத்தும் புஜாரா, வாஷிங்டன், சைனி!
கவுண்டி கிரிக்கெட் தொடரில் புஜாரா இரட்டை சதமும், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தங்களது அறிமுக போட்டிகளிலேயே 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். ...
-
கவுண்டி கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே சதமடித்த புஜாரா!
மிடில்செஸ் அணிக்கெதிரான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சசெக்ஸ் அணியின் கேப்டன் சட்டேஷ்வர் புஜாரா சதமடித்து அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24