ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (டிசம்பர் 26) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இதில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷுப்மன் கில் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மூன்றாம் இடத்திலும் களமிறங்கவுள்ளனர். இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஸ்காட் போலண்ட்.
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.