ஐபிஎல் 2022: மும்பை, சிஎஸ்கே அணிகள் குறித்து விமர்சித்த வாட்சன்!

Updated: Fri, Apr 15 2022 22:25 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவது சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சொதப்பி வருவது தான்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போல 5 முறை சாம்பியனான மும்பை அணி 5 போட்டிகளில் ஒரு தோல்வியை கூட பெறவில்லை. இதனால் புள்ளிப்பட்டியலில் 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் பேசியுள்ளார். அதில், “மும்பை இந்தியன்ஸ் அணி செய்த மிகப்பெரிய தவறு இஷான் கிஷானுக்காக ரூ.15.25 கோடி செலவு செய்தது தான். இஷான் சிறந்த வீரர் தான். ஆனால் அவ்வளவு பெரிய தொகை தேவையில்லை. இதனால் மற்ற சில சிறப்பான வீரர்களை வாங்க முடியாமல் மும்பை தடுமாறியது.

இதே போல வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கடந்த சில மாதங்களாக விளையாடவில்லை என்பது தெரியும். எனினும் அவர் வந்துவிடுவார் என நம்பி ரு. 8.5 கோடிக்கு வாங்கியது. இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் தடுமாறி வருகிறது” என வாட்சன் கூறினார்.

சிஎஸ்கே குறித்து பேசிய அவர், “சென்னை அணியின் மிகப்பெரிய தவறு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது தான். கடந்த சீசனில் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார் இருந்தனர். ஆனால் இந்த முறை அவர்களை மிஸ் செய்கின்றனர். இதே போல ஹாசல்வுட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களும் இல்லாதது பின்னடைவாக உள்ளது ”என வாட்சன் விமர்சித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை