சிஎஸ்கேவின் ஆல் டைம் லெவனைத் தேர்வு செய்த சுரேஷ் ரெய்னா; முக்கிய வீரர்களுக்கு இடமில்லை!
Suresh Raina Picks All Time CSK Playing XI: முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், ரசிகர்களால் மிஸ்டர் ஐபிஎல் என்று செல்லமாக அழைக்கப்படும் வீரருமான சுரேஷ் ரெய்னா தனது ஆல் டைம் சிஎஸ்கே பிளேயிங் லெவனைத் தேர்ந்தெடுத்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக நீண்ட காலமாக விளையாடிய வீரர். அவர் 2008 முதல் 2015 வரையிலும், பின்னர் 2018 முதல் 2021 வரையிலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி நான்கு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா, சுபாங்கர் மிஸ்ராவின் பாட்காஸ்டில் தனது ஆல் டைம் சிஎஸ்கே லெவனைத் தேர்ந்தெடுத்தார். இந்த அணியில் பல மூத்த வீரர்களை சேர்த்த அவர், டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு போன்ற நட்சத்திரங்களை சேர்க்கவில்லை.
ரெய்னா இந்த அணியில் முரளி விஜய் மற்றும் மேத்யூ ஹேடன் ஆகியோரை தொடக்க வீரர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். மேற்கொண்டு மூன்றாம் இடத்திற்கு மைக்கேல் ஹஸியையும், நான்காம் இடத்தில் சுப்ரமணியம் பத்ரிநாத்தையும் தேர்வு செய்துள்ளார். அதன்பின் மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் அல்பி மோர்கல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்பின் தனது அணியின் விக்கெட் கீப்பராக எம்.எஸ். தோனியை த் தேர்வு செய்ததுடன் அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுத்துள்ளார். முன்னதாக எம் எஸ் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 5 கோப்பைகளை வென்றது. அதன்பின் அணியின் பந்துவீச்சாளர்களாக டக் போலிஞ்சர், ஷதாப் ஜகாதி, ரவிச்சந்திரன் அஸ்வின், லட்சுமிபதி பாலாஜி மற்றும் மோஹித் சர்மாவையும் தேர்வு செய்த அவர், முத்தையா முரளிதரனை இம்பேக்ட் வீரராக தேர்வு செய்துள்ளார்.
அதில் குறிப்பாக ஷதாப் ஜகாதி மற்றும் மோஹித் சர்மாவைப் பாராட்டிய ரெய்னா, "ஜகாதி ஒரு எக்ஸ்-ஃபேக்டர் வீரர். அவர் 2010 முதல் 2013 வரை அற்புதமாக விளையாடினார், மேலும் எங்கள் வெற்றிகளுக்கு நிறைய பங்களித்தார், ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய அளவுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. சிஎஸ்கே அணிக்காக விளையாடும்போது மோஹித் ஊதா நிற தொப்பியை வைத்திருந்தார்” என்றார்.
அதேசமயம் சுரேஷ் ரெய்னா தனது இந்த அணியில் சிஎஸ்கேவின் ஜாம்பவான் வீரர்களாக கருதப்படும் டுவைன் பிராவோ, பிராண்டன் மெக்கல்லம், ஷேன் வாட்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தோனி மட்டும் ஜடேஜா மட்டுமே தற்போது வரையிலும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
சுரேஷ் ரெய்னாவின் ஆல் டைம் CSK XI: எம்.எஸ். தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), முரளி விஜய், மேத்யூ ஹேடன், மைக்கேல் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, சுப்பிரமணியம் பத்ரிநாத், ஆல்பி மோர்கெல், டக் பொலிங்கர், ஷதாப் ஜகாட்டி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, லட்சுமிபதி பாலாஜி, மோஹித் சர்மா, முத்தையா முரளிதரன் (இம்பேக்ட் வீரர்)