ஐபிஎல்-ன் மிகவும் மதிப்புமிக்க அணியாக மும்பை இந்தியன்ஸ் தேர்வு!
ஐபிஎல்லின் மதிப்புமிக்க அணிகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 1.3 பில்லியன் டாலர் மதிப்பில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.15 பில்லியன் டாலர் மதிப்பில் 2ஆம் இடத்தில் உள்ளது. முதல் சீசனில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணி 850 மில்லியன் டாலர்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.
ஸ்பான்சர்கள் மற்றும் ஊடக உரிமைகளை ஈர்ப்பதில் ஐபிஎல் உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் லீக் ஆகும். என்பிஏ மற்றும் ஐரோப்பிய கால்பந்து லீக்குகளின் யோசனைகள் மற்றும் பிசிசிஐ யின் நல்ல நிர்வாகத்தின் மூலம் குழு நிதியுதவி மற்றும் கோவிட் சமயத்தில் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்தல் போன்றவற்றின் யோசனைகளை பெற்ற ஐபிஎல் நிறுவனர்களுக்கு நிறைய வருவாய் கிடைத்துள்ளதாக ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது.
ஐபிஎல்லின் மதிப்புமிக்க அணிகளின் பட்டியல்:
(ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7,660 கோடிக்குச் சமம்
- மும்பை இந்தியன்ஸ் (மதிப்பு: $1.3 பில்லியன்)
- சென்னை சூப்பர் கிங்ஸ் (மதிப்பு: $1.15 பில்லியன்)
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (மதிப்பு: $1.1 பில்லியன்)
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (மதிப்பு: $1.075 பில்லியன்)
- டெல்லி கேபிடல்ஸ் (மதிப்பு: $1.035 பில்லியன்)
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மதிப்பு: $1.025 பில்லியன்)
- ராஜஸ்தான் ராயல்ஸ் (மதிப்பு: $1 பில்லியன்)
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (மதிப்பு: $970 மில்லியன்)
- பஞ்சாப் கிங்ஸ் (மதிப்பு: $925 மில்லியன்)
- குஜராத் டைட்டன்ஸ் (மதிப்பு: $850 மில்லியன்)