உலகக்கோப்பை 2023: போட்டி நடுவர்கள் மற்றும் கள நடுவர்கள் அறிவிப்பு!

Updated: Fri, Sep 08 2023 16:56 IST
Image Source: Google

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இத்தொடருக்கான அனத்து அனைத்துகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 

உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து, நியூசிலாந்து அணி அகமதாபாத்தில் மோத உள்ளது. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் 16 பேர் கள  நடுவர்களாகவும், 4 பேர் போட்டி நடுவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கள நடுவர்கள் விவரம் : கிறிஸ்டோபர் கேப்னி (நியூசிலாந்து), குமார் தர்மசேனா (இலங்கை), மரைஸ் எராஸ்மஸ் (தென் ஆப்பிரிக்கா), மைக்கேல் கோப் (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), பால் ரெய்பல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ (இங்கிலாந்து), ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்), அஷான் ராசா (பாகிஸ்தான்), அட்ரெய்ன் ஹோல்ட்ஸ்டாக் (தென் ஆப்பிரிக்கா), ஷர்புத்துல்லா இப்னே ஷாஹித் (வங்கதேசம்), பால் வில்சன் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ப் (இங்கிலாந்து), கிறிஸ் பிரவுன் (நியூசிலாந்து).

 

போட்டி நடுவர்கள்: ஜெப் குரோவ் (நியூசிலாந்து), ஆண்டி பைக்ராப்ட் (ஜிம்பாப்வே), ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்), ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியா).

அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்திற்கு நிதின் மேனன் மற்றும் குமார் தர்மசேனா கள நடுவர்களாகவும், தொலைக்காட்சி நடுவராக பால் வில்சனும், 4ஆவது நடுவராக ஷர்புத்துல்லா இப்னே ஷாஹித்தும், போட்டி நடுவராக ஆண்டி பைக்ராப்டும் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை