யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10: கலிஃபோர்னியா நைட்ஸை வீழ்த்தி நியூயார்க் வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sat, Aug 26 2023 21:54 IST
Image Source: Google

டி20 கிரிக்கெட்டின் வளர்ச்சி தற்பொழுது கிரிக்கெட் உலகெங்கும் பரவ செய்திருக்கிறது. இந்த வகையில் அமெரிக்கா தற்போது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வம் காட்டி வருகிறது.  இந்த நிலையில் அமெரிக்காவில் பத்து ஓவர்கள் கொண்ட யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரிலும் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதலாவது குவாலிஃபையர் லீக் நியூயார்க் வாரியர்ச் - காலிஃபோர்னியா நைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் டாஸ் வென்ற கலிஃபோர்னியா நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் ஜாக் காலிஸ் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடி வந்த ஆரோன் ஃபிஞ்ச் 42 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இதையடுத்து கள்மைறங்கிய நியூயார்க் அணியில் திலகரத்னே தில்சன் 8 ரன்களுக்கும், காம்ரன் அக்மல் 9 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் இணைந்த ரிச்சர்ட் லூவி - மிஸ்பா உல் ஹக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிச்சர்ட் லூவி 47 ரன்களையும், மிஸ்பா உல் ஹக் 29 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் நியூயார்க் வாரியர்ஸ் அணி 8.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தியாசத்தில் கலிஃபோர்னியா நைட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூயார்க் வாரியர்ஸ் அணி யுஎஸ் மாஸ்டர்ஸ் டி10 லீக் தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை