
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பார்ல் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஜொஹன்னஸ்பர்க்கிலுள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனெவே இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றதுள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்ல் ராயல்ஸ்: ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(கே), விஹான் லூப், டேன் விலாஸ், மிட்செல் வான் ப்யூரன், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஃபேபியன் ஆலன், ஜார்ன் ஃபோர்டுயின், லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி, ஓபேத் மெக்காய்.
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), லுயூஸ் டு ப்ளூய், சிபோனெலோ மகன்யா, மொயீன் அலி, டொனோவன் ஃபெரீரா, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், கைல் சிம்மண்ட்ஸ், லிசாத் வில்லியம்ஸ், நந்த்ரே பர்கர், இம்ரான் தாஹிர்.