Advertisement

கெயில் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பொல்லார்ட்!

டி20 கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் எனும் பெருமையை கீரன் பொல்லார்ட் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement
கெயில் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பொல்லார்ட்!
கெயில் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் பொல்லார்ட்! (Image Source: Google)
Tamil Editorial
By Tamil Editorial
Aug 29, 2025 • 08:19 PM

Kieron Pollard Record: கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர ஆல் ரவுண்டர் கீரன் பொல்லார்ட் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Tamil Editorial
By Tamil Editorial
August 29, 2025 • 08:19 PM

கரீபியன் பிரீமியர் லீக் 2025 தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் நியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கீரன் பொல்லார்ட் சிறப்பு சாதனை  படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அந்த வகையில் இப்போட்டியில் கீரன் பொல்லார்ட் 19 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்வார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்களை எட்டிய உலகின் இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் அவர் பெறுவார். தற்போது வெஸ்ட் இண்டீஸீன் ஜம்பவான் கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட்டில் 14,562 ரன்களைச் சேர்த்து முதலிடத்தில் உள்ளார். 

கீரோன் பொல்லார்டைப் பற்றிப் பேசினால், அவர் உலகம் முழுவதும் உள்ள லீக்குகளில் விளையாடுகிறார், மேலும் இதுவரை தனது வாழ்க்கையில் மொத்தம் 711 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 632 இன்னிங்ஸ்களில் மொத்தம் 13,981 ரன்களை 31.63 சராசரியாகவும் 150.91 ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார். இது தவிர, அவர் டி20 கிரிக்கெட்டில் 332 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

  • கிறிஸ் கெய்ல் - 463 போட்டிகளில் 14,562 ரன்கள்
  • கீரோன் பொல்லார்ட் - 711 போட்டிகளில் 13,981 ரன்கள்
  • அலெக்ஸ் ஹேல்ஸ் - 507 போட்டிகளில் 13,931 ரன்கள்
  • டேவிட் வார்னர் - 424 போட்டிகளில் 13,595 ரன்கள்
  • ஷோயப் மாலிக் - 557 போட்டிகளில் 13,571 ரன்கள்
Also Read: LIVE Cricket Score

இது மட்டுமல்லாமல், தற்போதைய சிபிஎல் சீசனில், கீரன் பொல்லார்டின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. அதில் அவர் 4 போட்டிகளில் 3 இன்னிங்ஸ்களில் 127 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் தற்போது காலின் முன்ரோவுக்குப் பிறகு இந்த சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
வீடு Special Live Cricket Video Sports