ஆசிய கோப்பை 2022: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன்!

Updated: Sun, Aug 28 2022 08:23 IST
Asia Cup 2022, India vs Pakistan – Probable XI (Image Source: Google)

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான ஆட்டமாக இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டியில் பாபர் படையும், ரோஹித் சர்மா படையும் பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை உலகக் கோப்பை தொடரில் 12 முறை மோதி பாகிஸ்தான் தோற்றது.

ஆனால், கடந்த முறை தான் முதல் முறையாக உலகக் கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவை டி20 போட்டியில் வீழ்த்தியது. அதன் பிறகு 10 மாதத்திற்கு பிறகு இரு அணிகளும் இப்போது தான் சந்திக்கின்றன.

துபாய் ஆடுகளத்தை பொறுத்த வரை, டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது. கடைசியாக விளையாடிய 11 போட்டியில், ஒரு போட்டியில் மட்டுமே முதலில் பேட் செய்த அணி வென்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் டாஸ் பெரும் முக்கியத்துவத்தை பெறும். நேற்றைய ஆட்டத்தில் கூட ஆஃப்கானிஸ்தான் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமானது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுத்தவரை, கடந்த முறை அடைந்த தோல்வி பிறகு, விளையாடிய அனைத்து டி20 தொடரிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணியின் ஒரே குறை என்றால், ராகுலும், விராட் கோலியும், பல நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளதால், அவர்களுடைய பேட்டிங் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது. மேலும் ஆடுகளம் தொய்வாக இருந்தால், இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் திணற வாய்ப்புள்ளது.

அப்படி இருக்கும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக்கின் பங்கும் மிகவும் முக்கியம். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பதும் சந்தேமாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியை பொருத்த வரையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஸமான், ஆசிஃப் அலி போன்ற மிரட்டலான பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், பந்துவீச்சில் போதிய அனுபவம் பாகிஸ்தான் அணியில் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

உத்தேச லெவன்

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல்/ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கே), முகமது ரிஸ்வான், ஃபகார் ஸமான், ஆசிஃப் அலி, குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, ஷதாப் கான், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி, முகமது ஹஸ்னைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை