இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டெஸ்ட் போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IND vs SA, 1st Test, Cricket Tips: தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இந்த போட்டி நடைபெற இருப்பதன் காரணமாக இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
IND vs SA: Match Details
மோதும் அணிகள் - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா
இடம் - ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா
நேரம் - காலை 9.30 மணி
IND vs SA: Live Streaming Details
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.
IND vs SA: Head-to-Head
- Total Matches: 44
- India: 16
- South Africa: 18
- Drawn: 10
IND vs SA: Ground Pitch Report
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 42 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 12 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 10 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 323 ரன்களாகவும், நான்காவது இன்னிங்ஸ் சராசரி 143 ரன்களாகவும் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வடு வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
IND vs SA: Possible XIs
India: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், ஷுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
South Africa: டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி சோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், டெவால்ட் ப்ரீவிஸ், கைல் வெர்ரைன், மார்கோ ஜான்சன், செனுரன் முத்துசாமி, கேசவ் மகாராஜ், சைமன் ஹார்பர், ககிசோ ரபாடா
IND vs SA: Player to Watch Out For
Probable Best Batter
இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறந்த இந்திய பேட்ஸ்மேனாக ஷுப்மான் கில் இருந்து வருகிறார். தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, டோனி டி ஸோர்ஸி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.
Probable Best Bowler
இந்திய அணிக்காக முகமது சிராஜும், தென் ஆப்பிரிக்காவுக்காக கேசவ் மகாராஜும் பந்துவீச்சில் கவனம் ஈர்க்கலாம்.
Today Match Prediction: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது.
Also Read: LIVE Cricket Score
IND vs SA Match 1st Test, Today Match IND vs SA, IND vs SA Prediction, IND vs SA Predicted XIs, Injury Update of the match between India vs South Africa