இவர்கள் இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் - அக்சர் படேல்

Updated: Fri, May 28 2021 14:51 IST
Image Source: Google

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல். இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் அக்சர் படேல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,‘என்னுடைய திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஒருநாள் போட்டிகளில் காயம் காரணமாக இந்திய அணில் இடம் கிடைக்காமல் போனது. டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினும், ஜடேஜாவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுவும் சமீப காலமாக ஜடேஜா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் இன்னொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளருக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது.

இந்திய டெஸ்ட் அணிக்காக குல்தீப் யாதவ், சஹால் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர். அணியில் சில நேரம் காம்பினேஷனில் மாற்றப்படுவதால், நமக்கான வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை நிரூபிக்கும் வகையில் விளையாடுவேன். அப்படிதான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி விளையாடினேன்.

டெஸ்ட் போட்டிகளில் சில நேரங்களில் எதிரணி பேட்ஸ்மேன்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிக்கொண்டு இருப்பார்கள். அப்போது நம் வீரர்களை சோர்வின்றி வைத்துக்கொள்ள ஜடேஜா நகைச்சுவைகள் கூறுவார். இதனால் ஒட்டுமொத்த அணியும் உற்சாகமாக இருக்கும். 

மேலும் நான் அனைத்து விதமான மைதானங்களிலும் விளையாடியுள்ளேன். அதனால் பேட்ஸ்மேனை திணற வைப்பது எனக்கு இயல்பான ஒன்றுதான். ஏனெனில் நான் எனது பந்து வீச்சில் நிரைய யுக்திகளை கையாண்டு வருகிறேன். அதேசமயம் சீனியர் வீரர்களான அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நான் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன்’ என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை