எம்சிசி விதிமாற்றம் குறித்து கருத்து தெரிவித்த பிரையன் லாரா!

Updated: Sun, Mar 20 2022 18:48 IST
Image Source: Google

பந்துவீச்சாளர் முனையில் நிற்கும் வீரர், பந்துவீச்சாளர் பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகர்ந்தால் அவர் ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் செய்வதே மன்கட் ரன் அவுட். 

மன்கட் ரன் அவுட் செய்யலாம் என்றாலும், அது ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்பதால், வீரர்கள் யாரும் அதை செய்ய தயங்குவார்கள். பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு நகரும் பேட்ஸ்மேனை எச்சரித்து மட்டுமே செல்வார்கள்.

ஆனால் 2019 ஐபிஎல்லில், அப்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் ரன் அவுட் செய்தார். அது விதிகளுக்குட்பட்டதுதான் என்று அஸ்வினுக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்தாலும், பல முன்னாள் வீரர்கள் அஸ்வின் செயலை ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என விமர்சித்தனர்.

ஆனால் அஸ்வினோ தான் விதிகளை மீறி எதுவும் செய்யவில்லை என்றும், தான் செய்தது சரிதான் என்பதில் உறுதியாகவும் இருந்தார். 

இந்நிலையில், பந்துவீசும் முன்பாக க்ரீஸை விட்டு பவுலிங் முனையில் நிற்கும் வீரர் நகர்ந்து, பந்துவீச்சாளர் அவரை ரன் அவுட் செய்தால் அது ரன் அவுட் தான் என்று எம்சிசி விதிமாற்றம் செய்தது.

இந்த விதிமாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் லெஜண்ட், சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளருமான பிரயன் லாரா, இது ஆட்டத்தின் ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்பதுதான் இப்போதும் என்னுடைய கருத்து என்றார் லாரா.

மேலும் இந்த விதிமுறையான இந்தாண்டு ஐபிஎல் சீசனில் கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்பட பல சுழற்பந்துவீச்சாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை