ஹார்திக்கின் கருத்தால் மீண்டும் பிசிசிஐ மீது எழுந்த சர்ச்சை!

Updated: Tue, Feb 01 2022 20:42 IST
Hardik Pandya Says His Bowling In IPL 2022 Is 'A Surprise For Everyone'
Image Source: Google

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பண்டியா பந்துவீச முடியாமல் விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார். எனினும் அவர் மீது முழு நம்பிக்கை வைத்த பிசிசிஐ, டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கொடுத்து ஆச்சரியம் கொடுத்தது.

இதுகுறித்து பேசியிருந்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, டி20 உலகக் கோப்பையின்போது ஹார்திக் பாண்டியா நிச்சயம் பந்துவீசுவார். அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் பவுலிங் வீச சம்மதித்ததால் தான் அணியில் எடுத்தோம் என்பது போல கூறினார். இதனால் பாண்டியாவின் பவுலிங் மீது அதீத எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் முதல் போட்டியிலேயே சுக்கு நூறாக அதனை உடைத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் ஹர்திக் ஒரு ஓவரை கூட வீசவில்லை. முழு நேர பேட்ஸ்மேனாக செயல்பட்டார். அதன்பின்னர் மற்ற லீக் போட்டிகளிலும் பெரியளவில் பவுலிங் செய்யாததால் அவர் மீது விமர்சனங்கள் குவிந்தன.

இந்நிலையில், நான் பவுலிங் வீசுவேன் எனக்கூறவில்லை என்றும், முழு நேர பேட்ஸ்மேனாக மட்டுமே உலகக்கோப்பை அணிக்குள் எடுக்கப்பட்டேன் என ஹர்திக் பகிரங்கமாக கூறியுள்ளார். பேட்ஸ்மேனாக முழு நேர நான் தேர்வு செய்யப்பட்ட போதும், அணியின் நிலைமையை பார்த்து பவுலிங் வீச கடும் முயற்சி எடுத்தேன். ஆனால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ரசிகர்கள் தவறாக புரிந்துக்கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிசிசிஐ ஹர்திக் பாங்டியா விவகாரத்தில் பொய் கூறியதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. வேண்டுமென்றே, ஆல்-ரவுண்டர் இல்லாத அணியை உருவாக்கி லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேற காரணமாக அமைந்துவிட்டது. இதனை மறைக்க ஹர்திக்கை பவுலிங் வீசுவார் என பொய் கூறியதாக சேத்தன் சர்மா மீது பிசிசிஐ மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் விராட் கோலி விவகாரம் பூதாரகரமான நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா விவகாரம் சூடுபிடித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை