பொல்லார்டின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?

Updated: Sun, Jun 01 2025 14:48 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இதில் இரு அணிகளும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பண்டியா முன்னாள் வீரர் கீரென் பொல்லார்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

அதன்படி பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா 2 சிக்ஸர்களை எடிக்கும் பட்சாத்தில், ஐபிஎல் தொடரில் 20ஆவது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கீரன் பொல்லார்டின் சாதனையை முறியடிக்கும் வாய்பைப் பெற்றுள்ளார். முன்னதாக கீரன் பொல்லார்ட் 33 சிக்ஸர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில், ஹர்திக் பாண்டிய 32 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் எம்எஸ் தோனி 72 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

ஐபிஎல் தொடரில் 20ஆவது ஓவரில் அதிக சிக்ஸர்கள்

  • 72 - எம்எஸ் தோனி (347 பந்துகள்)
  • 33 - கீரான் பொல்லார்ட் (189 பந்துகள்)
  • 32* - ஹார்திக் பாண்ட்யா (131 பந்துகள்)
  • 32 - ரவீந்திர ஜடேஜா (194 பந்துகள்)
  • 23 - ரோஹித் சர்மா (91 பந்துகள்)

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியாவின் செயல்திறனைப் பற்றிப் பேசினால், அவர் 14 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி பேட்டிங்கில் 209 ரன்களையும், பந்துவீச்சில் 33 ஓவர்கள் வீசி 13 விக்கெட்டுகளை கைப்பற்றிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PBKS vs MI Predicted Playing 11

Punjab Kings XI : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

இம்பேக்ட் வீரர் - யுஸ்வேந்திர சாஹல்.

Mumbai Indians XI : ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேட்ச்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ரிச்சர்ட் க்ளீசன்

Also Read: LIVE Cricket Score

இம்பேக்ட் வீரர் - அஷ்வினி குமார்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை