பிசிசிஐயின் தலைவராக சௌரவ் கங்குலி பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு பிசிசிஐ-யின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து மூன்று ஆண்டுகள் பிசிசிஐ தலைவராக செயலாற்றிய ரோஜர் பின்னி, 70 வயதை ஏட்டியதன் காரணமாக கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஏனெனில் பிசிசிஐ தலைவராக செயல்படுவோம் 70 வயதிற்குள் இருக்க வேண்டும் என்ற விதி முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையாடுத்து பிசிசிஐயின் இடைக்கால தலைவராக ராஜூக் சுக்லா செயல்பட்டார். தலைவர் பதவிக்கான விண்ணபங்களையும் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. மேலும் பிசிசிஐயின் புதிய தலைவருக்கான போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டமானது மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) புதிய தலைவராக முன்னாள் வீரர் மிதுன் மன்ஹாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் (ஜே.கே.சி.ஏ) முன்னாள் கிரிக்கெட் வீரரான மன்ஹாஸ், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
மேலும் இவர் டெல்லி ரஞ்சி அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இதுதவிர ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ள அவர், குஜராத் டைட்டன்ஸின் பயிற்சியாளர் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். 1997/98 ஆம் ஆண்டில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமான மிதுன் மன்ஹாஸ், இந்திய அண்டர்19 மற்றும் ஏ அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
மிதுன் மன்ஹாஸ் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராக இருந்துள்ளார். அவர், 157 முதல் தர போட்டிகளில் 244 இன்னிங்ஸ்களில் 9,714 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 27 சதங்களையும், 49 அரைசதங்களை விளாசிய அவர், 45.82 என்ற சராசரியையும் வைத்துள்ளார். அதேசமயம் 130 லிஸ்ட் ஏ போட்டிகளில், மிதுன் மன்ஹாஸ் 45.84 சராசரியாக 4,126 ரன்கள் எடுத்தார். இதில் ஐந்து சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும்.
Also Read: LIVE Cricket Score
இதனையடுத்து புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் மிதுன் மின்ஹாஸுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதேசயம் இந்த கூட்டத்தில், ராஜீவ் சுக்லா பிசிசிஐ துணைத் தலைவராகத் தொடர்வார் என்றும், கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் (கேஎஸ்சிஏ) தற்போதைய தலைவரான ரகுராம் பட் பொருளாளராக இருப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர, தேவ்ஜித் சைகியா செயலாளராகவும், பிரப்தேஜ் பாட்டியா இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.