ஐபிஎல் 2022 இந்தியாவில் தான் - சவுரவ் கங்குலி!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பங்கேற்கவுள்ள ஒட்டுமொத்த வீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி 590 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றன.
மேலும் இந்த வீரர்கள் மெகா ஏலாம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடத்தப்படுமா என்ற கேள்வி வலுத்துவருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் இந்தியாவில் தான் நடைபெறுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், கரோனா தொற்று அதிகரிக்கு வரை ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தியாவில் தான் நடைபெறும். இதுவரை இத்தொடரை இந்தியாவில் நடத்தவது என்றே முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் லீக் போட்டிகளுக்கான மைதானங்களைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா, மும்பை, நவி மும்பை, மற்றும் புனே ஆகிய இடங்களில் தொடரை நடத்த ஆலோசித்து வருகிறோம். நாக் அவுட் சுற்றுகளுக்கான மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கங்குலி தெரிவித்துள்ளதன் படி, மும்பையின் வான்கடே மைதானம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையிலுள்ளா டி ஒய் பட்டீல் மைதானம், புனேவில் உள்ள எம்சிஏ மைதானம் ஆகிய இடங்களில் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.