சச்சினுடன் அர்ஜுனை ஒப்பீடாதீர்கள் - கபில்தேவ்!

Updated: Sat, Jun 04 2022 11:16 IST
Image Source: Google

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். 22 வயதான அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

கடந்த 2021 மற்றும் 2022 என இரண்டு சீசன்களாக மும்பை அணியுடன் அர்ஜுன் பயணித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் மும்பை அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. 

ஆனாலும் இறுதிவரை அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.  அது குறித்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். இப்போது ஐபிஎல் தொடர் முடிந்துவிட்டது. இந்நிலையில், சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு முன்னாள் வீரர் கபில்தேவ் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

கபில்தேவின் கருத்துப்படி, ''சச்சின் டெண்டுல்கர் இமாலய சாதனைகளை கடந்த வீரர். அவருடைய சாதனைகளோடு ஒப்பிட்டு அர்ஜுன் டெண்டுல்கரை நோக்கக்கூடாது. அர்ஜூன் டெண்டுல்கரை அவருடைய சுயமான பாதையில், பாணியில் விளையாட விட வேண்டும். சச்சின் சாதித்தவற்றில் 50 சதவீதத்தையாவது சாதிக்க முடிந்தால் அது அர்ஜுனின் சாதனையாக இருக்கும்'' என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::