Joe Root Records: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்தின் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 38ஆவது சதத்தைப் பதிவுசெய்து பல்வேறு சாதனைகளை உடைத்துள்ளார்.

Advertisement

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது 433 ரன்களைக் குவித்து விளையாடி வருகிறது. 

Advertisement

இதில் இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதமடித்து விளையாடி வருகிறார். தற்போது ஜோ ரூட் 121 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 36 ரன்களுடனும் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து அசத்தியுள்ளார்.

அதிக டெஸ்ட் சதங்கள்

சர்வதேச டெஸ்டில் ஜோ ரூட் தனது 38ஆவது சதத்தை இன்று பூர்த்தி செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காரா சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார். முன்னதாக் குமார் சங்கக்காரா 38 சாதங்களை விளாசி 4ஆம் இடத்தில் இருந்த நிலையில், ஜோ ரூட் அதனை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

டெஸ்ட் வரலாற்றில் அதிக சதங்கள் (டாப்-5)

  • 51 - சச்சின் டெண்டுல்கர் (329 இன்னிங்ஸ்)
  • 45 - ஜாக் காலிஸ் (280 இன்னிங்ஸ்)
  • 41 - ரிக்கி பாண்டிங் (287 இன்னிங்ஸ்)
  • 38* - ஜோ ரூட் (286 இன்னிங்ஸ்)
  • 38 - குமார் சங்ககாரா (233 இன்னிங்ஸ்)
Advertisement

இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள்

இதுதவிர்த்து இப்போட்டியில் ஜோ ரூட் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் உலக சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 11 சதங்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில் தற்சமயம் ஜோ ரூட் 12ஆவது முறையாக சதமடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் (டாப்-5)

  • 12* – ஜோ ரூட் (62 இன்னிங்ஸ்)
  • 11 – ஸ்டீவ் ஸ்மித் (46 இன்னிங்ஸ்)
  • 8 – கேரி சோபர்ஸ் (30 இன்னிங்ஸ்)
  • 8 – விவ் ரிச்சர்ட்ஸ் (41 இன்னிங்ஸ்)
  • 8 – ரிக்கி பாண்டிங் (51 இன்னிங்ஸ்)
Advertisement

ரிக்கி பண்டிங் சாதனை முறியடிப்பு

மேற்கொண்டு ஜோ ரூட் இப்போட்டியில் 120 ரன்களை எட்டியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் வரிசையில் ரிக்கி பாண்டிங்கைப் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் இதுவரை 287 இன்னிங்ஸில் 13,378 ரன்களை சேர்த்துள்ள நிலையில், ஜோ ரூட் 286 இன்னிங்ஸில் 13380 ரன்களைச் சேர்த்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 329 இன்னிங்ஸில் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் (டாப்-5)

  • 15,921 – சச்சின் டெண்டுல்கர் (329 இன்னிங்ஸ்)
  • 13,379* – ஜோ ரூட் (286 இன்னிங்ஸ்)
  • 13,378 – ரிக்கி பாண்டிங் (287 இன்னிங்ஸ்)
  • 13,289 – ஜாக் காலிஸ் (280 இன்னிங்ஸ்)
  • 13,288 – ராகுல் டிராவிட் (286 இன்னிங்ஸ்)
Advertisement

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், லியாம் டௌசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

Also Read: LIVE Cricket Score

இந்தியா பிளேயிங் லெவன்: கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர். ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ், முகமது சிராஜ்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News