தென் ஆப்பிரிக்க டி20 தொடர்: களத்தில் இறங்கிய ஐபிஎல் அணிகள்!

Updated: Tue, Jul 19 2022 17:33 IST
Image Source: Google

ஐபிஎல் போன்றே டி20 தொடரினை நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 6 ஐபிஎல் அணிகள் தென்னாப்பிரிக்கவில் 6 அணிகளை ஏலம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முன்னாள் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் கிரிம் ஸ்மித்  தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

ஐபிஎல் அணிகள் எந்தெந்த அணிகளை வாங்கியுள்ளது

  • மும்பை இந்தியன்ஸ் - கேப் டவுன் 
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜோஹன்னஸ்பெர்க் 
  • லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ்- டர்பன் 
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- போர்ட் எலிசபெத் 
  • டெல்லி கேப்பிடல்ஸ் - பிரிட்டோரியா 
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - பார்ல்

இந்த தொடருக்காகத்தான் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தினை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி 2023இல் இந்த டி20 தொடர் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை