ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரித்திற்கு நன்றி தெரிவித்த ரமீஸ் ராஜா!

Updated: Wed, Apr 06 2022 20:36 IST
PCB Chairman Ramiz Raja Thanks Cricket Australia After Successful Tour (Image Source: Google)

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள், 1 டி20 என மூன்று தொடர்களிலும் விளையாடியுள்ளது ஆஸ்திரேலிய அணி. 1998-க்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு வந்ததால் இத்தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

டெஸ்ட், ஒருநாள் தொடர்களுக்கு அடுத்ததாக இரு அணிகளுக்கிடையிலான ஒரு ஆட்டம் கொண்ட டி20 தொடர் லாகூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் ஆஸம் 46 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ஆஸி. வீரர் நாதன் எல்லீஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஃபிஞ்ச் 55 ரன்கள் எடுத்தார்.  

பாகிஸ்தானில் டெஸ்ட், டி20 தொடர்களை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்றது. 

மேலும் கடந்த ஒரு மாதமாக இரு அணிகளும் ரசிகர்களுக்கு அற்புதமான கிரிக்கெட் தருணங்களை வழங்கியுள்ளார்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்த மகத்தான நாடு என்ன வழங்குகிறது என்பதை நேரில் பார்த்து, அனுபவித்த பிறகு, ஆஸ்திரேலிய வீரர்களும் அதிகாரிகளும் இனிய நினைவுகளை வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள்.

கிடைக்கக்கூடிய சிறந்த வீரர்களை அனுப்பி இந்தத் தொடரை சாத்தியமாக்கிய கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கும், பிஎஸ்எல் தொடரைசிறப்பான மற்றும் குறைபாடற்ற தொடரை வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை