ஐபிஎல் 2022: இஷாந்த் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டு சிஎஸ்கே - காரணம் என்ன?

Updated: Fri, Apr 15 2022 16:07 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்று 4 தோல்வி, ஒரு வெற்றி என புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.

சென்னை அணி இனி ப்ளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால் ஒரே வழி தான் உண்டு. அந்த அணிக்கு மீதம் 9 போட்டிகள் உள்ளன. இதில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்புகள் இருக்கும். இல்லையென்றால் சிரமம் தான் என்ற சூழல் உள்ளது. ஆனால் முக்கிய பின்னடைவாக தீபக் சஹார் இல்லாதது உள்ளது.

காலில் காயம் ஏற்பட்டு ஓய்வில் இருந்த தீபக் சஹாருக்கு, முதுகில் மற்றொரு பிரச்சினை ஏற்பட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்தே விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு மாற்று வீரரை தேடி வருகின்றனர். அதுவும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவை குறிவைத்துள்ளனர்.

ஃபார்ம் அவுட் என மெகா ஏலத்தில் எந்தவொரு அணியும் கண்டுக்கொள்ளாத வீரரை ஏன் சிஎஸ்கே வாங்க நினைக்கிறது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில் இதற்கான காரணம் தெரியவந்துள்ளது. தற்போது போட்டி நடைபெறும் மும்பை மற்றும் புனே களங்களில் வேகப்பந்துவீச்சு முக்கிய பங்காக உள்ளது. அதுவும் டெஸ்ட் பவுலர்கள் தான் சோபித்து வருகின்றனர்.

அந்த களங்களில் டெஸ்ட் போட்டிகளில் போடுவது போன்ற லெந்த்-ஐ பயன்படுத்த வேண்டும். இளம் வீரர்களுக்கு அந்த அனுபவம் கிடையாது. அனுபவம் கொண்ட டெஸ்ட் பௌலர்களான உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோர்பவர் ப்ளேவில் சிம்மசொப்பனமாக விளங்கி வருகின்றனர். இதனால்தான், டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் கொண்ட இஷாந்த் ஷர்மாவை சிஎஸ்கே வாங்க திட்டமிட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::