துலீப் கோப்பை: மத்திய மண்டல அணி அறிவிப்பு; துருவ் ஜூரெலுக்கு கேப்டன் பொறுப்பு!

Updated: Thu, Aug 07 2025 20:32 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் ஆகாஸ்ட் 28ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிற்தி போட்டிக்கு தகுதிப்பொற்றுள்ளன. 

அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆஃப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டல அணிகளும், இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் ஆகாஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளன. 

இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மத்திய மண்டல அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளார் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்கள் தீபாக் சஹார், கலீல் அஹ்மத் உள்ளிய்ட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதில் குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் அங்கமாக செயல்பட்டனர். இதில் துருவ் ஜூரெலுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்த நிலையில், குல்தீப் யாதவ் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டனாக வழிநடத்திய ரஜத் படிதார், யாஷ் ரத்தோர், ஹர்ஷ் தூபே உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மத்திய மண்டல அணி: துருவ் ஜூரல் (சி & டபிள்யூ.கே), ரஜத் படிதார், ஆர்யன் ஜூயல், டேனிஷ் மாலேவார், சஞ்சித் தேசாய், குல்தீப் யாதவ், ஆதித்யா தாக்கரே, தீபக் சாஹர், சரண்ஷ் ஜெயின், ஆயுஷ் பாண்டே, சுபம் ஷர்மா, யாஷ் ரத்தோர், ஹர்ஷ் துபே, மானவ் சூதர்.

Also Read: LIVE Cricket Score

கூடுதல் வீரர்கள்: மாதவ் கௌசிக், யாஷ் தாக்கூர், யுவராஜ் சவுத்ரி, மஹிபால் லோம்ரோர், குல்தீப் சென், மற்றும் உபேந்திர யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை