கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து - கத்தார் அணிகள் மோதின. இப்போட்டியின் தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடியது. அதன்பயணாக ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ ஒரு கோல் அடித்தார்.
இதன்மூலம் முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது. இதையடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் அபாரமாக செயல்பட்ட நெதர்லாந்து அணிக்கு 49ஆவது நிமிடத்தில் பிரெங்கி டி ஜாங் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
ஆனால் இறுதிவரை போராடிய கத்தார் அணியால் ஒரு கோலைக்கூட அடிக்கமுடியாமல் திணறியது. இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வென்றது.
அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடமும் பிடித்தது. அதேசமயம் போட்டியை நடத்தும் கத்தார் அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.