நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர பந்துவீச்சாளராக அறியபடுபவர் டிம் சௌதீ. இதுவரை நியூசிலாந்து அணிக்கக 107 டெஸ் போட்டிகளில் விளையாடியுள்ள டிம் சௌதீ பந்துவீச்சில் 391 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 2245 ரன்களையும் எடுத்துள்ளார். 

Advertisement

அதன்பின் கடந்தாண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை ஒன்றை தனது பெயரில் வைத்துள்ளார். அதாவது அவர் 2008 ஆம் ஆண்டு நேப்பியரில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார், இதில் சிறப்பு என்னவென்றால் அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 40 பந்துகளில் 9 சிக்ஸர்களுடன் 77 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

Advertisement

இதுவே டிம் சௌதீயின் தனித்துவ சாதனைக்கு சாதனைக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஏனெனில் அவர் தனது அறிமுக போட்டியில் 77 ரன்களை அடித்த நிலையில், அதன்பின் கிட்டத்திட்ட 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவரால் அந்த எண்ணிக்கையைத் தாண்ட முடியவில்லை. இதன்மூலம் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அடித்தே ரன்களையே தனது இறுதிப்போட்டிவரை அதிகபட்ச ஸ்கோராக கொண்ட வீரர் எனும் சாதனைய படைத்துள்ளார். 

இருப்பினும், தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை மேம்படுத்தாமல் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனையை அவரால் பெறமுடியவில்லை. அந்தவகையில் இந்த சாதனை பட்டியலில் இங்கிலாந்தின் முன்னாள் வீரர்கள் அலெக் ஸ்டீவர்டு மற்றும் ஸ்டூவர்ட் பிராடு அகியோர் தனித்து நிற்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்களின் அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்த நிலையிலும், அதன்பின் நீண்ட காலம் அதனை முறியடியாகாமல் ஓய்வை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறப்பு சாதனை பட்டியல்

ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து): தனது 32வது டெஸ்டில் 169 ரன்களை எடித்திருந்த அவர், அதன்பின் விளையாடிய 135 டெஸ்ட் போட்டிகளில் அவரால் ஒரு போட்டியில் கூட 100 ரன்களை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஒரே சதமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அலெக் ஸ்டீவர்டு (இங்கிலாந்து): தனது 18ஆவது டெஸ்டில் 190 ரன்கள் எடுத்த, அதன் பிறகு விளையாடிய 115 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஸ்கோரை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 சதங்களையும், 45 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக போட்டியின் ஸ்கோரை முறியடிக்க தவறிய வீரர்கள்

டேரன் கோஃப் (இங்கிலாந்து): கடந்த 1994ஆம் அண்டு ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் 65 ரன்களை எடுத்திருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் விளையாடிய 57 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஸ்கோரை அவரால் முறியடிக்க முடியவில்லை.

Advertisement

ரொமேஷ் களுவித்தாரன (இலங்கை): ஆகஸ்ட் 1992 இல் கொழும்பில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்டில் 100 ரன்கள் எடுத்தார். ஆனால் அதன்பின் அவர் விளையாடிய 48 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஸ்கோரை அவரால் எட்டமுடியவில்லை.

Also Read: LIVE Cricket Score

ஆண்ட்ரூ ஹட்சன் (தென் ஆப்பிரிக்கா): கடந்த1991-92 இல் பிரிட்ஜ்டவுனில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தனது முதல் டெஸ்டில் 163 ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் விளையாடிய 34 டெஸ்ட் போட்டிகளில் அந்த ஸ்கோரை முறியடிக்கத் தவறிவிட்டார். இருப்பினும் அவர் மேலும் மூன்று டெஸ்ட் சதங்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News