12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாட்னா பைரட்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.
Advertisement
பரபப்பான இப்போட்டியில் தொடக்கம் முதலே பாட்னா பைரட்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைக் கைப்பற்றியது. அவர்களுக்கு சவாலளிக்கும் வகையில் யு மும்பா அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
Advertisement
இறுதியில் பாட்னா பைரட்ஸ் அணி 34 - 31 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாட்னா அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற சச்சின் 12 புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் இந்த சீசனில் பாட்னா அணி 4ஆவது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.