12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது.
Advertisement
இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
Advertisement
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜெய்ப்பூர் வீரர் அர்ஜுன் தேஷ்வால் இன்றைய போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 5 போனஸ் புள்ளிகள் உட்பட 15 புள்ளிகளை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 37 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாவது இடத்திலும், யு மும்பா அணி 33 புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன.