மீராபாய் பானுவிற்கு அபினவ் பிந்த்ராவின் உணர்ச்சிப்பூர்வ கடிதம்..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மிராபாய் சானுவுக்கு முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரரும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவருமான அபினவ் பிந்தராவின் உணர்ச்சிப்பூர்வமிக்க வாழ்த்து கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் சாதித்துள்ளார். ஸ்னாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி வென்றார் மீராபாய்.
இதன் மூலம் இந்தியா சார்பில் பளுதூக்குதல் பிரிவில் பதக்கம் வென்ற இரண்டாவது வீராங்கனை எனும் பெருமையை மிராபாய் சானு படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2000ஆவது ஆண்டில் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலம் வென்றிருந்தார்.
Trending
இந்நிலையில் பதக்கம் வென்ற மிராபாய் சானுவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் மிரபாய் சானுவை வாழ்த்தும் விதமாக, 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் 10 மீட்டர் 'ஏர் ரைபிள்' பிரிவு துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா உணர்ச்சிப்பூர்வ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடித்ததில், “அன்புள்ள மிராபாய், இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்கு எனது வாழ்த்துக்கள். டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் உங்கள் சிறப்பான செயல்திறன் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு இந்திய விளையாட்டு வீரரால் மிகச் சிறந்த ஒன்றாக நினைவுகூரப்படுவது உறுதி. மேலும் இது வரும் தலைமுறைகளுக்கு ஒரு உத்வேகமாகவும் அமையும்.
விளையாட்டுகளில் நமது நாடு பங்கேற்ற நூறு ஆண்டுகளுக்கும் மேலாகிறது. ஆனால் ஒருசிலர் மட்டுமே பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இது பல வருட கடின உழைப்பு மற்றும் உங்கள் மனநிலையை முழுமையாக்குவதற்கு செலவழித்த ஒற்றை எண்ணம் கொண்ட உறுதிப்பாட்டிற்கான வெகுமதியாகும்.
தேசத்திற்காக பெருமை சேர்க்கும் உங்கள் தேடலில் நீங்கள் செய்த தியாகங்கள் அனைத்தும் இந்த நம்பமுடியாத மைல்கல்லை இன்னும் இனிமையாக்கும் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இக்கடிதத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இவரது இந்த உணர்ச்சிபூர்வமிக்க கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now