Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 11, 2025 • 12:03 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 11, 2025 • 12:03 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். 

Trending

சென்னை சூப்பர் கிங்ஸ்

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் தொடரை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்நிலையில் தற்போது ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி பொறுப்பேற்றுள்ளார். இதனால் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ச் அணி எழுச்சி பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர் ஆகியோர் உள்ள நிலையில் இன்று ஆண்ட்ரே சித்தார்த் களமிறங்கவும் அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சில் நூர் அஹ்மத், மதீஷா பதிரானா, கலீல் அஹ்மத் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்/ஆண்ட்ரே சித்தார்த், ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அஜிங்கியா ரஹானே தலைமையிலான நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த போட்டியில் தோல்வியை சந்தித்த பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் அந்த அணி இப்போட்டியில் தங்கள் வெற்றியை பதிவுசெய்யும் முனைப்பில் உள்ளது. அந்த அணியில் அஜிங்கியா ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. 

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் வருண் சக்ரவர்த்தி ரன்களைக் கட்டுப்படுத்துவதுடன் விக்கெட்டுகளையும் வீழ்த்தி வருகிறார். அவருடன் சுனில் நரைன், ஹர்ஷித் ரானா, வைபவ் அரோரா உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அணிக்கு கூடுதல் சாதக்கத்தை வழங்கும். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச லெவன்: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், மொயீன் அலி, ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 30
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 19
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 10
  • முடிவில்லை - 01

Also Read: Funding To Save Test Cricket

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே
  • பேட்ஸ்மேன்கள் - அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், அங்கிரிஷ் ரகுவன்ஷி
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன் (கேப்டன்), ஆண்ட்ரே ரஸல்
  • பந்துவீச்சாளர்கள் - கலீல் அகமது, வருண் சக்ரவர்த்தி, நூர் அகமது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement