
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ஒயிட்வாஷ் ஆனது. அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் இரு அணிகளும் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
England Playing XI: பில் சால்ட், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.
Australia Playing XI: மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஸாம்பா, ஸ்பென்சர் ஜான்சன்.