
ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
AUS vs SA 1st T20I, Dream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 5 -0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி முத்தரப்பு டி20 தொடரை இழந்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AUS vs SA: Match Details
- மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
- இடம் - மார்ராரா கிரிக்கெட் மைதானம், டார்வின்
- நேரம்- ஆகஸ்ட் 10, மதியம் 2.450 மணி (இந்திய நேரப்படி)