
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்கியது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் இன்ற் நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமி, ஹர்ஷித் ரானா மற்றும் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச பிளேயிங் லெவன்: தன்ஸித் ஹசன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கேப்டன்), தாவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மெஹதி ஹசன் மிராஸ், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்ஸிம் ஹசன் சாகிப், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.
இந்திய அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, குல்தீப் யாதவ்.