இங்கிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இங்கிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Pakistan Dream11 Prediction 2nd T20I: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று நடைபெற இருந்த நிலையில் ம்ழை காரணமாக டாஸ் வீசப்படாமலே ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை (மே 25) பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருபெரும் வலிமை வாய்ந்த அணிகளாக கருதப்படும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News