
Sanju Samson: திருவனந்தபுரம் ராயல்ஸ் அணிக்கு எதிரான கேசிஎல் லீக் போட்டியில் கொச்சி புளூ டைகர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 62 ரன்களை கடந்து அசத்தினார்.
கேரளா கிரிக்கெட் லீக் தொடரின் அறிமுக சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் திருவனந்தபுரம் ராயல்ஸ் மற்றும் கொச்சி புளூ டைகர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கொச்சி அணிக்கு தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் - மனோகரன் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மனோகரன் 42 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய சாலி சாம்சனும் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, மறுபக்கம அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் இந்த தொடரில் அவர் தனது மூன்றாவது 50+ ரன்களையும் கடந்து அசத்தினார்.