
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
Zimbabwe vs Sri Lanka 1st ODI Match Prediction: இலங்கை அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது.
இதில் ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநால் போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை தொடாருக்கு முன் இலங்கை அணி இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இந்த தொடரை எதிர்கொள்கிறது. இதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ZIM vs SL 1st ODI: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஜிம்பாப்வே vs இலங்கை
- இடம் - ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், ஹராரே
- நேரம்- ஆகஸ்ட் 29, மதியம் 1 மணி (இந்திய நேரப்படி)