
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இதில் இந்திய அணி மட்டும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மீதமுள்ள 3 அரையிறுதி இடத்திற்கு மற்ற அணிகள் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதேசமயம் ஆஸ்திரேலியா அணியில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ் ஆகியோருக்கு பதிலாக மார்கஸ் ஸ்டொய்னிஸ், கேமரூன் க்ரீன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(கே), மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, ஆதில் ரஷித், மார்க் வூட்
ஆஸ்திரேலியா : டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹசில்வுட்.