
Ambati Rayudu's All-Time IPL XI: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அம்பதி ராயுடு தனது ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியைத் தேர்வு செய்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக எம் எஸ் தோனியை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்தது. மேலும் ஐபிஎல் தொடரில் முதல் கோப்பையையும் வென்று ஆர்சிபி அணி தங்கள் மீதான இழுக்கையும் போக்கியது. அதேசமயம் இறுதிப்போட்டி வரையிலும் முன்னேறிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்துள்ளார். அவர் தனது அணியில் தொடக்க வீரராக 'யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெய்ல் மற்றும் மும்பை இந்தியன்ஸின் ரோஹித் சர்மா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கெய்ல் இதுவரை ஐபிஎல்லில் 6 சதங்கள் மற்றும் 357 சிக்ஸர்களை அடித்துள்ளார், அதே நேரத்தில் ரோஹித் தனது பெயரில் 5 சதங்களை விளாசியுள்ளர்.