
Sri Lanka Squad: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஒமன் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளனர். இதன் காரணமாக இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கும் தயாராகும் வகையில் இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதலும், டி20 தொடர் செப்டம்பர் மூன்றாம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.