1-lg.jpg)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. மீதமுள்ள 2 அரையிறுதி இடத்திற்கு மற்ற அணிகள் போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில் புள்ளிப்பட்டியளில் முதலிரு இடங்களில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியில் ஜெரால்ட் கோட்ஸிக்கு பதிலாக தப்ரைஸ் ஷம்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா : குயின்டன் டி காக், டெம்பா பவுமா(கே), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சென், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி.
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.