
இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் வரிசைக்கட்டி நிற்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்: முகமது வசீம், குசல் பெரேரா, ஆண்ட்ரே ஃபிளெட்சர், நிக்கோலஸ் பூரன்(கே), டிம் டேவிட், டுவைன் பிராவோ, அகீல் ஹொசைன், டிரென்ட் போல்ட், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வக்கார் சலாம்கெயில், முஹம்மது ரோஹித் கான்.
அபுதாபி நைட் ரைடர்ஸ் : அலிஷான் ஷரபு, ஆண்ட்ரீஸ் கொஸ், மைக்கேல்-கைல் பெப்பர், சாம் ஹைன், லௌரி எவான்ஸ், இமாத் வாசிம், ஆண்ட்ரே ரஸல், டேவிட் வில்லி, சுனில் நரைன்(கே), ஜோஷுவா லிட்டில், மதியுல்லா கான்.