ஐபிஎல் 2024: ராஜஸ்தான் பேட்டர்கள் தடுமாற்றம்; சிஎஸ்கே அணிக்கு 142 ரன்கள் டார்கெட்!

ஐபிஎல் 2024: ராஜஸ்தான் பேட்டர்கள் தடுமாற்றம்; சிஎஸ்கே அணிக்கு 142 ரன்கள் டார்கெட்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News