
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், முகமது நபி ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கே), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்ஃபர்ட், பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா
டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், பிருத்வி ஷா, அபிஷேக் போரல், ரிஷப் பந்த்(கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்ட்சன், அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.