
ஆசிய கோப்பை 2025: முகமது வசீம் தலைமையிலான யுஏஇ அணி அறிவிப்பு! (Image Source: Google)
UAE Squad For T20 Asia Cup 2025: ஆசிய கோப்பை தொடருக்கான ஐக்கிய அரபு அமீரக அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியில் ஜுனைத் சித்திக், ஹர்ஷித் கௌசிக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.