அஸ்வின் ஒரு சுழற்பந்துவீச்சு விஞ்ஞானி - மாண்டி பனேசர் பாராட்டு!
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு, முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Indian Premier League: ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்திருந்த நிலையில், ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் மட்டும் அவர் விளையாடி வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஐபிஎல் தொடரின் என்னுடைய பயணம் இன்றுடன் முடிவடைகிறது. அனாலும் மற்ற லீக் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவாக இருந்த ஐபிஎல், பிசிசிஐ மற்றும் ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது எனது எதிர்காலத்தை அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறினார்.
இதனையடுத்து ரவிச்சந்திர அஸ்வினுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் வீரர் மாண்டி பனேசரும் தனது வாழ்த்தை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அவர் முதலில் ஐபிஎல்லில் ஒரு டி20 பந்து வீச்சாளராக தனது முத்திரையைப் பதித்தார், குறிப்பாக பவர்பிளேயில் சிறந்து விளங்கினார், மேலும் படிப்படியாக அனைத்து வடிவங்களிலும் ஒரு அற்புதமான ஆல்ரவுண்ட்ராக வளர்ந்துள்ளார்.
அவர் தனது கற்றலை அதிகப்படுத்தினார், தொடர்ந்து புதிய மாறுபாடுகளை உருவாக்கினார், தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலளித்தார். அதனால்தான் அவர் ஒரு சுழற்பந்துவீச்சு விஞ்ஞானி என்ற நற்பெயரைப் பெற்றுள்ளார்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து மாண்டி பனேசரிந்த இந்த கருத்தானது இணையத்தில் வைரலாகி வருவதுடன், பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
ஐபிஎல் தொடரில் கடந்த 2009-ல் அறிமுகமான அஸ்வின், இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக மொத்தம் 221 போட்டிகளில் விளையாடி, பேட்டிங்கில் 833 ரன்களையும், பந்துவீச்சில் 187 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேலும் அவர் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now