
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தென் ஆப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஐ கேப் டவுன்: ரஸ்ஸி வான்டெர் டுசென், ரியான் ரிக்கல்டன், டெவால்ட் ப்ரீவிஸ், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், கானர் எஸ்டெர்ஹூய்சன், கீரன் பொல்லார்ட்(கே), ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபாடா, தாமஸ் கேபர், ஒல்லி ஸ்டோன்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்: மேத்யூ ப்ரீட்ஸ்கி, குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், ஜேஜே ஸ்மட்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மகாராஜ்(கே), வியான் முல்டர், நவீன்-உல்-ஹக், ரீஸ் டாப்லி, நூர் ஆஹ்மத்.